தினபலன்
இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2025 (செவ்வாய்க்கிழமை)

மேஷம் (Aries)
இன்று வெளிநாட்டு தொடர்புகள் பலமாகும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். சொத்து சம்பந்தப்பட்ட விசயங்களில் வெற்றி உண்டு. காதல் மற்றும் திருமண முயற்சிகள் நல்ல முடிவுக்கு வரும்.
ரிஷபம் (Taurus)
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப உறவுகள் இனிமையாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காணலாம்.
மிதுனம் (Gemini)
அதிர்ஷ்டம் சற்று குறைவாக காணப்படும் நாள். செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் சிறு சிக்கல்கள் ஏற்படலாம். சீரான உணவு மற்றும் ஓய்வு தேவை.
கடகம் (Cancer)
சந்திராஷ்டமம் காரணமாக சோர்வான நிலை ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறிய மனக்கசப்புகள் இருக்கலாம்.
சிம்மம் (Leo)
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி. உடல் நலம் மேம்படும்.
கன்னி (Virgo)
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். உறவினர் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
துலாம் (Libra)
தூர பயணங்களில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடுகள் அதிகரிக்கும். நிதிநிலை சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.
விருச்சிகம் (Scorpio)
சுபகாரியங்கள் நடைபெறும். வீடு, நிலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும்.
தனுசு (Sagittarius)
புதிய நட்புகள் உருவாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மார்க்கெட்டிங் சார்ந்தவர்களுக்கு சிறந்த நாள்.
மகரம் (Capricorn)
பழைய பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு தாய் வீட்டு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் சாதனை பெருமையை தரும்.
கும்பம் (Aquarius)
புதிய முயற்சிகள் வெற்றிகரமாகும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மீனம் (Pisces)
பணவரவு அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி காணப்படும். சிறிய உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும் – கவனமாக இருங்கள்.






