வணிகம்
PPF: மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்தாலே 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம் – எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்!

PPF திட்டத்தில் கணவன்-மனைவியாக இணைந்து முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரராகலாம்!
நீண்டகால சேமிப்பு மற்றும் வரி சலுகைக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF). இதில் எவ்வித மோசடியும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் பணத்தை சேமிக்கலாம். இப்போது, ஒருவரின் முயற்சிக்கு இணையாக துணையாக மனைவியும் செயல்பட்டால் – இருவரும் சேர்ந்து 20 ஆண்டுகளில் கோடீஸ்வரராகலாம்.
PPF திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஒரு நபருக்கே ஒரு கணக்கு மட்டுமே.
கூட்டுக் கணக்கு என்ற வசதி இல்லை.
வருடத்திற்கு ஒரு கணக்கில் அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மனைவியும் தனி கணக்கில் ₹1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.
மொத்தம் வருடத்திற்கு ₹3 லட்சம் முதலீடு செய்யும் வசதி இருவரும் சேர்ந்து பெறலாம்.
தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு திட்டம் செல்லும்; மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகும் கணக்கு:
கணவன் ரூ.1.5 லட்சம் x 20 ஆண்டுகள் = ரூ.30 லட்சம்
மனைவி ரூ.1.5 லட்சம் x 20 ஆண்டுகள் = ரூ.30 லட்சம்
வட்டி (7.1% அடிப்படையில்): ரூ.36,58,288 (தலா கணக்குக்கு)
மொத்தம் (ஒருவருக்கு): ரூ.66,58,288
இருவரும் சேர்ந்து மொத்தம்: ரூ.1,33,16,576
இதன் மூலம், நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் சேர்ந்து 20 ஆண்டுகளில் ரூ.1.33 கோடியை சேமிக்க முடியும்!
EEE வரி சலுகை:
PPF திட்டம் EEE (Exempt-Exempt-Exempt) வகையைச் சேர்ந்தது. அதாவது:
முதலீடு செய்யும் தொகைக்கு வரி இல்லாது (Section 80C)
கிடைக்கும் வட்டிக்கும் வரி இல்லை
முடிவில் பெறும் தொகைக்கும் வரியில்லை
கவனிக்க வேண்டிய விஷயம்:
15 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு திட்டத்தை நீட்டிக்க வேண்டுமானால், முதிர்ச்சி அடையும் வருடத்திற்கு முன்பே வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை தவறவிட்டால், நீட்டிக்க முடியாது.
















