வணிகம்
மெட்டாவுக்கு அதிர்ச்சி? இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பை விற்பதற்கே வழிவகுக்கும் அமெரிக்க நீதிமன்ற விசாரணை!

Meta-வுக்கு எதிராக FTC வழக்கு – இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பை பிரிக்குமா?
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனம் மெட்டா தற்போது மிக பெரிய சட்ட சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் Federal Trade Commission (FTC) தொடர்ந்த வழக்கில், மெட்டாவின் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
என்ன வழக்கு?
FTC தரப்பில் 2020-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டபோது, மெட்டா தனது முக்கிய போட்டியாளர்களாக மாறக்கூடிய நிறுவனங்களை வாங்கி, சமூக ஊடக சந்தையில் ஏகபோக நிலையை உருவாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, இன்ஸ்டாகிராம் (2012 – $1 பில்லியன்) மற்றும் வாட்ஸ்அப்பை (2014 – $22 பில்லியன்) மெட்டா வாங்கியது என FTC வாதம்.
மார்க் ஜுக்கர்பெர்க் மீது விசாரணை:
தற்போது, ஜுக்கர்பெர்கிடம் இருநாள் விசாரணை நடக்கிறது. இதில் மெட்டா இந்த இரண்டு நிறுவனங்களையும் ஏன் வாங்கியது? அதன் நோக்கம் போட்டியைக் குறைக்கும் திட்டமா? என்பதே விசாரணையின் மையமாக உள்ளது.
மெட்டாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் என்ன நடக்கும்?
✅ மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமும், வாட்ஸ்அப்பும் தனியாக பிரிக்க வேண்டிய சூழ்நிலை
✅ மெட்டாவின் விளம்பர வருவாயில் பெரும் பாதிப்பு
✅ 2025ல் மெட்டாவின் US விளம்பர வருவாயில் இன்ஸ்டா மட்டுமே 50.5% பங்குள்ளதாக கணிப்பு
✅ டிக்டோக், ஸ்னாப்சாட், யூடியூப், X (Twitter) போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் மீது தாக்கம்
மெட்டா தரப்பு பதில்கள்:
மெட்டா தனது போட்டியாளர்களுடன் (YouTube, TikTok, iMessage, X) தற்போது கடுமையாக போட்டியிட்டு வருகிறது
இன்ஸ்டா மற்றும் வாட்ஸ்அப்பை வாங்கியதுடன் எந்த விதமான சட்டமீறலும் இல்லை
FTC-வின் குற்றச்சாட்டுகள் வரலாற்று அடிப்படையிலானவை, தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாது















