ஆன்மீகம்
மார்ச் 12, 2025-ல் சுக்கிரன் சதயம் நட்சத்திரத்தில்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெறும் வாய்ப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 12, 2025 அன்று சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சதயம் நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரமாக இருக்கின்றது. இந்நிலையில், ராகுவின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெரிய வரும்.
ஜோதிடத்தில், ராகுவுக்கும் சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதால், இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தந்துவிடும். குறிப்பாக, திடீர் நிதி ஆதாயங்களும், தொழிலில் முன்னேற்றமும் கிடைக்கும்.
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு செல்வதால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணம் பெறுவதற்கான பல வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுகள் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி தொழிலில் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் நல்ல பலன்களை தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீக வளர்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நிதி ரீதியான உயர்வு ஏற்படும். வணிகத்தில் புதிய ஆர்டர்களும், லாபம் அதிகரிக்கும்.கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணியிடத்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்பின் பலனாக புதிய வாய்ப்புகள் ஏற்படும். வேலை தேடும் மக்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி ரீதியான செழிப்பு ஏற்படும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இன்றைய ராசிபலன் – 20 ஜூன் 2026 (சனிக்கிழமை)

இன்றைய ராசிபலன் – 19 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – 17 ஜூன் 2026 (புதன்கிழமை)

இந்த 4 ராசிக்காரர்களிடம் கவனம் தேவை! சிக்கலான குணமும் கணிக்க முடியாத நடத்தையும் கொண்டவர்கள் யார்?














