Connect with us

தினபலன்

இன்றைய (பிப்ரவரி 24, 2025) ராசிபலன்

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்

மேஷம் (Aries): விசா கிடைத்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. உடல் நலம் சிறந்து இருக்கும். பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம் (Taurus): உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனப் பயம் விலகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

மிதுனம் (Gemini): இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக அமைதியை காக்கவும். இறைவனை வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

கடகம் (Cancer): கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தம்பதியரிடையே வாக்குவாதம் ஏற்படலாம்; அமைதியை காக்கவும். பிள்ளைகள் நன்கு படிப்பர். உணவு விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும்; சிக்கனமாக இருக்கவும். காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.

சிம்மம் (Leo): வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வியாபாரத்தில் வருமானம் உயரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மதிப்பிடப்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்வர். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்.

கன்னி (Virgo): அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். ஆன்மீக செலவுகளும் ஏற்படும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசர தேவைக்காக எடுத்த கடனை அடைப்பீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம் (Libra): வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களுடன் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் அமைதியாக அணுகவும்.

விருச்சிகம் (Scorpio): சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். யாருக்கும் உறுதிமொழி அளிக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர்.

தனுசு (Sagittarius): உறவினர்களில் சிலர் உங்கள் புத்திசாலித்தனத்தை பாராட்டுவர். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். உடல் நலம் மேம்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியப் போக்கு நீங்கும்.

மகரம் (Capricorn): உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பிடுவர். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவுவர். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். அரசியலில் நாட்டம் கூடும். முகம் புதுப் பொலிவு பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம் (Aquarius): வெறுத்துச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் மாற்றம் ஏற்படும். உடல் நலம் மேம்படும். பயணங்களில் கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

மீனம் (Pisces): புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இன்று சிறந்த நாள். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் கிடைக்கும்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.