Connect with us

சினிமா

புஷ்பா 2 இயக்குநரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு!

Published

on

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை, சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மாபெரும் வருவாயைத் தொடர்ந்து நடந்துள்ளது.சுகுமாரின் கரியரில் மைல்கல்லாக அமைந்த புஷ்பா மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த புஷ்பா 2 ஆகிய திரைப்படங்கள், ஒருங்கிணைந்து 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றன. இந்நிலையில், வருமான வரித்துறையினர், புஷ்பா 2 தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் சுகுமாரின் பணிவரவு மற்றும் செலவுகளை சோதனை செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஐதராபாத்தில் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனியின் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தகவலின் அடிப்படையில், வரி ஏய்ப்புக்கு எதிரான சோதனை முதல் கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் வெளியிடாத போதும், சுகுமாரின் ஆவணங்கள் விசாரணைக்குப் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

புஷ்பா இயக்குநரின் சாதனை மற்றும் சோதனை:
சுகுமாரின் இயக்கத்தில் வந்த புஷ்பா முதல் புஷ்பா 2 வரை, தெலுங்கு திரையுலகில் தனி முத்திரையைப் பதித்துள்ளன. புஷ்பா திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதை வெல்லச் செய்ததோடு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய வரலாற்றில் ஒன்றாக மாறியது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியை ஒட்டி ஏற்பட்ட வரி சிக்கல்கள், சுகுமாரைச் சிக்கியுள்ளன.

தெலுங்கு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படங்களின் வருவாய் தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து தலைவிரித்தாடி வருகின்றன. வருமான வரித்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? தெலுங்கு சினிமா உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்3 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
About us – aaa mush love. Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). heavy equipment transport fairfax va.