வேலைவாய்ப்பு
திருப்பூரில் ஆய்வுகூட நிபுணர் வேலை: அரசு வேலை! விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
\திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வேலை 2 காலி பணியிடங்கள் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி தற்காலிகமாக வழங்கப்படுகிறது.
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு மற்றும் +2 அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு:
62 வயதுக்குட்பட்டவர்களே விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.
மாத ஊதியம்:
13,000 ரூபாய் வரை.
விண்ணப்பிக்கும் முறை:
- Bio Data உடன் Passport size Photo
- விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் ரூ.25 தபால் கொடுத்து, 4*10 அளவிலான கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
அறை எண்: 1, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்,
அரசு மருத்துவமனை வளாகம்,
திருப்பூர் – 641604.
இத்தேதி: 08.01.2025
நேர்முகத்தேர்வு:
10.1.2025 அன்று காலை 10 மணிக்கு,
அறை எண்: 120, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641604.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

சனி பெயர்ச்சி | 30 ஆண்டு கழித்து மீன ராசிக்குள்அடைந்த சனி — 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!

கடக ராசிக்கு பாக்கிய சனி – திருமணம், குழந்தை பேறு, நிதி முன்னேற்றம்!

புதிய ஆண்டு ராசி பலன் 2025: இந்த ராசிகாரர்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்…!

Infosys இல் Opentext VIM Developer பணிக்கு அழைப்பு!

இறைவனை மீறி எதுவும்நடக்காது,விதிப்படி தான் நடக்கும்? டிஆர் கண்ணீர் பேட்டி

அரசியலில் ஈடுபடுகிறாரா பேரறிவாளன்? அதிரடி பேட்டி






















