இந்தியா
மத்திய பிரதேசத்தில் 4 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ. 1 லட்சம் அறிவிப்பால் சர்ச்சை!

மத்திய பிரதேசத்தில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெற்றால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை மத்திய பிரதேச பிராமண நல வாரியத்தின் தலைவர் விஷ்ணு ரஜவுரியா வெளியிட்டார். இளம் தலைமுறையினர் கல்வியை முக்கியமாகக் கருதி, ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால், நமது வருங்கால தலைமுறையை பாதுகாக்க இது அவசியம் என அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, பிராமண சமூக வாக்குகளை கவர்வதற்கான அரசியல் முயற்சியாகவும், பிற சமூகங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























