வேலைவாய்ப்பு
DHS பணி அறிவிப்பு: 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.60,000 வரை சம்பளம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
DHS பணி அறிவிப்பு: 69 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன – விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதி
திருநெல்வேலி மாவட்ட சுகாதாரச் சங்கம் (DHS) பல்வேறு பணிகளுக்கான 69 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவப் பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகள் தற்காலிகமாக 11 மாதக் கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இது தற்காலிகமான பதவிகள் என்பதால், நிரந்தர வேலைவாய்ப்புகளுக்கான உரிமை, முன்னுரிமை மற்றும் சலுகைகள் பின்னாளில் கோர இயலாது என்று தெரிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
- DEO
- Driver
- Nurse
- Medical Officer
- மற்றும் பல்வேறு பணிகள்
கல்வித் தகுதி:
- 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / B.Sc / BDS / D.Pharm / Diploma / ITI / M.Sc / MA / MBBS / MD போன்ற தகுதி படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 வருடங்கள்.
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.














