சினிமா செய்திகள்
இதுதான் சர்கார் படத்திற்கு கிடைத்த உண்மையான அங்கீகாரம்!

சர்கார் படத்தில் உங்கள் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டால் அதுகுறித்து, நீங்கள் 49P மூலம் புகார், அளித்து, உங்களுக்கான ஓட்டுரிமையை நீங்கள் பெறலாம் என்ற கருத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தளபதி விஜய்யை கொண்டு அழகாக படமாக்கி இருந்தார்.

நிகழ்கால அரசியல், ஆளுங்கட்சியை சாடுதல் போன்ற பல விசயங்கள் படத்தில் இருந்ததால், ஆளுங்கட்சியின் எதிர்ப்பும் படத்திற்கு அதிகமாகவே இருந்தன. இது ஒரு புறம் படத்திற்கு இலவச புரொமோஷனாக இருந்தாலும், பல இடங்களில் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து அதன் வசூலையும் வெற்றியையும் பாதியாகவே குறைத்தது என்றும் சொல்லலாம்.
இந்நிலையில், வருகிற லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம், சர்காரில் விஜய் சொன்ன 49P குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
இதனை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சர்கார் படத்தின் மையக்கருவை அங்கீகரித்த தேர்தல் குழுவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஃபர்ஸ்ட் லுக் வந்து அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ள இந்த நேரத்தில் தளபதி ரசிகர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இந்த விளம்பர யுக்தி குஷியை ஏற்படுத்தியுள்ளது.



















