தமிழ்நாடு
வேளச்சேரி 92அம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு: 175 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதியில் 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த வாக்குச் சாவடிக்கு மட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குபதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதனை அடுத்து இன்று காலை 7 மணி முதல் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி 175 வாக்குகள் மட்டுமே இதுவரை பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வாக்குச்சாவடியில் 548 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் தற்போது பாதிக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வாக்குப்பதிவு செய்யும்போது அனைத்து வாக்காளர்களுக்கும் நடு விரலில் மை வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6ஆம் தேதி நடந்த தேர்தலின்போது அதிக வாக்குகள் இந்த வாக்குச்சாவடியில் பதிவாகி இந்த நிலையில் தற்போது 175 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















