Connect with us

வணிகம்

93% சொத்துக்களை இழந்த ஆசியாவின் 2வது பணக்காரர்… என்ன காரணம்?

Published

on

By

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக இருந்த ஒருவர் தற்போது 200 பில்லியன் டாலர் கடன்களுடன் தனது 93 சதவீத சொத்துக்களை இழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் போர் மற்றும் பணவீக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் பெரிய பெரிய நிறுவனங்களை தத்தளித்துக்கொண்டு வருகிறது என்றும் ஆதலால் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

#image_title

#image_titleஅந்த வகையில் சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று மிகப் பெரிய நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் மற்றும் ஆசியாவில் இரண்டாவது பணக்காரர் என்று புகழப்பட்டவர் 64 வயதான ஹுய் கா யான். இவர் சீனாவின் வணிகம் மற்றும் அரசியலை தனது செல்வாக்கால் கட்டுப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு 42 பில்லியன் சொத்துக்களை வைத்திருந்த இவர் தற்போது 3 பில்லியன் சொத்துக்களுடன் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது முக்கிய தொழில் ரியல் எஸ்டேட். சீனாவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பராக இருந்த இவரது கம்பெனி Evergrande மிகப்பெரிய நஷ்டம் அடைந்துள்ளது. இவருடைய நிறுவனம் மட்டுமின்றி சீனாவில் உள்ள ரியல் எஸ்டேட் ஒட்டு மொத்த அபாயத்தில் இருப்பதாகவும் இதனால் ரியல் எஸ்டேட் துறையே சுமார் 30 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

200 பில்லியன் டாலர் கடன்களை கொண்ட Evergrande தனது நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க தனது சொந்த சொத்துக்கள், சொந்த விமானம் உள்பட அனைத்தையும் விற்று நிறுவனத்தை தேற்ற முயற்சி செய்தும், முடியவில்லை என்று கூறப்படுகிறது. தனது வீடு உள்பட அனைத்து சொத்துக்களை விற்றாலும் அவர் முதலீட்டாளர்களுக்கு மற்றும் சப்ளையர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி 2021 ஆம் ஆண்டு தனது அமெரிக்க டாலர் பத்திரங்களையும் அவர் திரும்ப செலுத்தவில்லை, இதன் காரணமாக அவரது நிறுவனம் மிகப்பெரிய சிக்கலில் இருந்தது.

சுமார் 2 லட்சம் ஊழியர்களைக் கொண்ட அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 110 பில்லியனுக்கும் அதிகமான விற்பனையை ஈட்டியது. சீனாவில் உள்ள 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1300க்கும் அதிகமான கட்டிடங்களை கட்டிக் கொண்டிருந்த நிறுவனம்தான் அது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டை தான் ஒரு நம்பிக்கையான ஆண்டாக பார்ப்பதாகவும் தான் மீண்டு வருவதற்கான அனைத்து அறிகுறிகளும் இந்த ஆண்டு இருப்பதாகவும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவருடைய நிறுவனம் இந்த ஆண்டு மீண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வேலைவாய்ப்பு3 mins ago

MBA முடித்தவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு12 mins ago

ரூ.25,000/- ஊதியத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா36 mins ago

பட்ஜெட்டில் இந்த 7 முக்கிய அம்சங்கள் உள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வேலைவாய்ப்பு38 mins ago

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு57 mins ago

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

ரூ.67,000/- ஊதியத்தில் DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

ரூ.60,000/- ஊதியத்தில் BECIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 hours ago

பட்ஜெட் டேப்ளட் கணினியுடன் நிர்மலா சீதாராமன்!

இந்தியா4 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்5 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்2 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

வணிகம்1 day ago

தங்கம் விலை அதிரடியாக ஒரேநாளில் இவ்வளவு சரிவா(31/01/2023)!

வணிகம்3 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா2 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

சினிமா3 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தமிழ்நாடு3 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

வணிகம்2 days ago

இன்று ஆபரணத் தங்கம் விலை (30/01/2023)!