சினிமா செய்திகள்
100க்கு போன் போட்ட அதர்வா காப்பாத்துவாரு.. எப்படி இருக்கு 100 டிரைலர்!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள 100 படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.
இந்த படத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், எருமை சாணி விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமாக 100 படம் உருவாகியுள்ளது.
வரும் மே 9ம் தேதி இந்த படம் ரிலீசாகிறது. இதே போல விஷால் நடிக்கும் அயோக்யா படம் வரும் மே 10ம் தேதி ரிலீசாகிறது. அந்த படத்திலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த கதைக்களம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

















