இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 14.12.2025

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்டார் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
100 வயது கடந்த மூத்த கம்புனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி.
லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் சார்லஸ் ஜோஸ் மார்ட்டின் பாண்டிச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
சென்னையில் நடக்கும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில் அரை இறுதி போட்டியில் எகிப்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இன்று மாலை நடக்கும் இறுதி போட்டியில் சீன அணியை எதிர்கொள்கிறது.







