செய்திகள்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்! 2.25 கோடி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசு திட்டம்!
Published
4 மாதங்கள் agoon
By
Poovizhi
Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் பயன் பெற உள்ளனர்.
விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமை தொகை திட்டம் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதுவரை வழங்கப்படாத பொங்கல் ரொக்கத் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட்டது. இது இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம் ஆகும்.
திமுக ஆட்சியில், பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் வழங்கப்படாமல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு மட்டும் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்க அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 வழங்க ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படுவதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, ரூ.3000 ரொக்கம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரொக்கம் வழங்கப்பட உள்ளதால், வழக்கம்போல் பொங்கல் முடிந்ததும் அல்லாமல், ஜனவரி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.




















