இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 19.12.2025

- இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு.
- 100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மூன்றாவது நாளாக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் போராட்டம்.
- ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு
- 2022ல் ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததிலிருந்து இதவரை சட்ட விரோதமாக 202 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 119 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில் 26 பேர் உயிரிழந்தது மற்றும் 7பேர் காணாமல் போனது தவிர மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக ஒன்றிய பாதுகாப்பு இணை அமைச்சர் தெரிவித்தார்.
- மீண்டும் பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராடிவரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் டிசம்பர் 22ம் தேதி தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- இன்றைய தங்கம் விலை கிராமிற்கு ரூ.60 குறைந்து சவரன் ரூ.99040க்கு விற்பனை ஆகிறது.
- இந்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.221000க்கு விற்பனை ஆகிறது.
- 23வது சென்னை சரிவதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது (தமிழ்) ”டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்திற்காக நடிகர் சசிக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் இந்திய இலங்கை நாட்டினர் ஒன்று கூடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது.
- இந்திய தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே ஆன 4வது டி20 கிரிக்கெட் போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
- சீன – தைவான் போர்ச்சூழல் தொடர்ந்து வரும் நிலையில் தைவானுக்கு அமெரிக்கா ரூ.1லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
- டைப்-1 நீரிழிவு நோய் பதிவேடு 2024ல் தொடங்கப்பட்டதிலிருந்து ஓராண்டிலேயே தமிழ்நாட்டில் 5064 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்ட்டிருப்பது கண்டுபிடிப்பு. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அணைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.







