இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.450 உயர்ந்து கிராம் ரூ.14650ஆகவும் சவரன் ரூ.117200 ஆகவும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.360 ஆகவும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.360000 ஆகவும் விற்பனை ஆகிறது.
- குரோவேஷியா நாட்டில் இந்திய தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய தேசியக் கொடியை கிழித்து எறிந்து அட்டூழியம்.
- கடந்த 1956ம் ஆண்டுக்க முன்னரே இறப்புகள் ஏற்பட்டிருந்தாலும் தந்தை உறவு சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- ஒன்றிய அரசின் 10 மடங்கு எஃப்.சி. கட்டண உயர்வால் ஒரு லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்?பு ரூ.91.62 ஆக சரிவு.
- மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு. – எந்த வகையான வீடு வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை குடிநீருக்கான ஆதாரம் என்ன எல்பிஜி கேஸ் டிவி ஃபோன் கணினி இணைய வசதி கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் – ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது.
- 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. அணைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.














