இந்தியா
இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரும்? எகிறும் எதிர்பார்ப்புகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்பட வுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. எனவே வரக்கூடிய இந்த தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-லும் தேர்தல் முடிவிற்கு பிறகு புதிதாக பொறுப்பேற்கும் அரசு முழுமையான பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும். அதே தேதியில்தான் தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலின் இறுதி பட்டியலை வெளியிட உள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, பிப்ரவரி 17ம் தேதி தமிழ்நாடு அரசிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். .
சட்ட மன்ற தேர்தலையொட்டி பல்வேறு சலுகைகளை திமுக அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு சாதாரண பொது ஜனங்களிலிருந்து அரசு ஊழியர்கள் வரை நிலவுகிறது. குறிப்பாக, இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் அறிவிப்புகளாக மகளிர் உரிமை தொகை உயர்வு, மின் கட்டண சலுகை, முதியோர் உதவி தொகை, மாணவர்களுக்கான சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி வருகிறது.














