ஆன்மீகம்
சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறனாளிகள்: பச்சோந்தி குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்!

ஜோதிடக்கணிப்பின் படி, ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்களுக்கும், அவரவர் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சிலருக்கு சூழ்நிலை எப்படி மாறினாலும் அதற்கேற்ப தங்களைத் தானாகவே மாற்றிக்கொள்வதற்கான திறமை உண்டு. இவர்களே ‘பச்சோந்தி’ (Chameleon-like) என அழைக்கப்படுவார்கள். சமூக சூழலில், வேலைப்பளு மற்றும் உறவுகளில் இணக்கமாகப் பழகத் தெரிந்த இந்த ராசிக்காரர்கள், எப்போதும் வெற்றிக்குப் பின்னால் இருப்பார்கள்.
இவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்பதைப் பார்ப்போம்:
♊ மிதுனம் (Gemini):
புதன் கிரகத்தால் ஆட்சி பெறும் மிதுனம் இரட்டை தன்மை கொண்ட ராசியாகும். இவர்கள் பேச்சிலும், நடிப்பிலும், அணுகுமுறையிலும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் திறனுடையவர்கள். நுணுக்கமான தகவல்களை உணர்ந்து, வேகமாக சிந்தித்து பதிலளிக்கும் இந்த ராசிக்காரர்கள் எந்த குழுவிலும் எளிதில் ஒன்றுபடக் கூடியவர்கள்.
♎ துலாம் (Libra):
நீதியையும் சமநிலையையும் விரும்பும் துலாம் ராசிக்காரர்கள், தங்களுக்கு எதிராக இருந்தாலும், குழும அமைதிக்காக ஒத்துழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ராஜதந்திரத்துடன் பேசவும், பல தரப்புகளுக்கு இடையில் சமரசம் செய்யவும் இவர்களுக்கு நல்ல திறமை உண்டு. பிறரின் பார்வையில் தங்களை பொருத்திக் கொள்ளும் ஆற்றலால், இவர்கள் எங்கும் விரும்பப்படுகிறார்கள்.
♐ தனுசு (Sagittarius):
குருபகவான் ஆட்சி செய்கிற தனுசு ராசிக்காரர்கள் சாகசத்தையும் பயணங்களையும் விரும்புபவர்கள். புதிய அனுபவங்களை எதிர்நோக்கும் தனுசு ராசிக்காரர்கள் எந்த சூழலிலும் தங்களை தகவமைத்துக் கொள்வார்கள். இவர்களது திறந்த மனப்பான்மையும், நம்பிக்கையுடனான அணுகுமுறையும் அவர்களை வெற்றியடையச் செய்கின்றன.
♒ கும்பம் (Aquarius):
மாறுபட்ட சிந்தனைகளை கொண்ட கும்ப ராசிக்காரர்கள், எப்போதும் இயல்புக்கு மாறாக சிந்திப்பவர்கள். புதிய யோசனைகள், புதிய வழிகள் ஆகியவற்றில் திறமையுடன் செயல்படக்கூடிய கும்ப ராசிக்காரர்கள், தொழில்நுட்பம் மற்றும் புதுமையை விரும்புபவர்கள். மாற்றத்தை அச்சமின்றி எதிர்கொண்டு, அதனை தங்களுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.

















