செய்திகள்
நாங்கதான் பிரதான எதிர்க்கட்சி… தவெக வுக்கும் அதிமுக வுக்கும் போட்டி…

இரண்டு நாட்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடந்த தவெக 2வது ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடையே உரையாற்றிய அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜீன் அடுத்த 63 வாரங்களுக்கு தவெக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. நாங்கள் கூட்டணி பேரம் செய்து சீட் வாங்க கட்சி ஆரம்பிக்கவில்லை. எங்கள் தலைவரை முதல்அமைச்சராக்கும் நோக்கத்தில்தான் இந்த கட்சி தொடங்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு தொடுத்துள்ள மும்மொழி திட்டம் மற்றம் நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை திட்டம் ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க மார்ச் 5ம் தேதி அணைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததோடல்லாமல் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 45 கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதமும் அனுப்பியுள்ளார்.
இந்நத கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளும்.. எந்தெந்ந கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பல செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் கூட்டியுள்ள அணைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியை தவிர அணைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். பிரதான தெிர்க்கட்சி அதிமுகதான்.. என எடப்பாடியார் கூறியிருப்பது இன்று அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாயிருக்கிறது.
திமுக செய்யும் அணைத்து வேலைகளுக்கும் எதிர்ப்பை தெரிவிககும் அதிமுக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்றே அக்ட்சியின் கடந்தகால நடவடிக்கைகளை கவனித்த அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்தனர். இ.ந்நிலையில் எடப்பாடியார் கூறியிருப்பது அக்கட்சியின் நடவடிக்கைகளில் இனி வருங்காலத்தில் மாற்றங்கள் இருக்கும் என்பதற்கான அறிகுறியா என்பது போகப் போகத்தான் தெரியும்…


















