கிரிக்கெட்
விராத் கோஹ்லி சதம், இஷான் கிஷான் இரட்டை சதம்.. ரன்மழை பொழியும் இந்திய அணி!
Published
2 months agoon
By
Shiva
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தும் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து சாதனை செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 3 ரன்களில் அவுட் ஆனாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான்மிக அபாரமாக விளையாடினார் 131 பந்துகளில் 210 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விராத் கோலியை 91 பந்துகளில் 113 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன் வரை இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்து உள்ளன என்பதும் தற்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இன்றைய போட்டியில் 400 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You may like
-
12 ஒருநாள் போட்டிகளுக்கு இஷான் கிஷான் தடையா? அதிர்ச்சி தகவல்
-
வேலைநீக்க நடவடிக்கை.. அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை ஆயிரமா?
-
ஒரே மாதத்தில் ஒரு பில்லியன்.. இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!
-
நியூசிலாந்து வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி.. இதற்கு முந்தைய மோசமான தோல்வி சென்னையிலா?
-
உலகின் பழமையான நாடுகளின் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
-
349 ரன்கள் எடுத்தும் இந்தியாவை கதறவிட்ட பிரேஸ்வெல் .. நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நியூசிலாந்து!