சினிமா செய்திகள்
’மகான்’ துருவ் விக்ரம் கேரக்டர் போஸ்டர்: இணையத்தில் வைரல்!
Published
1 year agoon
By
Shiva
பிரபல நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ’மகான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் சற்று முன்னர் துருவ் விக்ரம் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஏற்கனவே ’ஆதித்யா வர்மா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படத்திலேயே தனது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் ’மகான்’ என்ற டைட்டில் கொண்ட இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#மகான்_மகன்_தாதா 🔥#SonOfMahaan 🔥
Presenting #DhruvVikram from #Mahaan 🔥 #DHRUVasDADA
➡️ https://t.co/ZZ1UGB3tDh#ChiyaanVikram
A @karthiksubbaraj Padam
A @Music_Santhosh Musical @actorsimha @SimranbaggaOffc @vanibhojanoffl @kshreyaas pic.twitter.com/LQ2sJIDG1O— Seven Screen Studio (@7screenstudio) September 10, 2021
துருவ் விக்ரம் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரண்டு கதாநாயகிகள் அடுத்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மகான்’ படத்தின் துருவ் விக்ரம் கேரக்டர் தாதா என சற்றுமுன் அறிவிக்கப்பட்டு இதுகுறித்த அட்டகாசமான போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இவை இரண்டும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You may like
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
காந்தாரா முதல் ஆர்ஆர்ஆர் வரை ரூ.400 கோடி வசூலித்த தென் இந்திய படங்கள்!
-
’விக்ரம்’ வெற்றியை அடுத்து கமலுக்கு குவியும் வாய்ப்புகள்: இதில் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகம்!
-
மை ஹீரோ, மை பிரெண்ட், மை விக்ரம்: குஷ்புவின் அசத்தல் டுவிட்!
-
பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் வசூலை முந்தி முதலிடத்தை பிடித்த விக்ரம்!
-
இது ரொம்ப தப்பு, ஒருநாள் எனக்கும் தோல்வி வரும்: நெல்சன் குறித்து லோகேஷ் கனகராஜ்