சினிமா செய்திகள்
’பீஸ்ட்’ குழுவினர்களுடன் தளபதி விஜய் கார் ஓட்டும் வீடியோ: இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இதுவரை இல்லாத அளவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் மற்ற நாடுகளில் இந்த படத்தை எதிர்பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சற்று முன்னர் பீஸ்ட் படக்குழுவினருடன் விஜய் காரில் செல்லும் வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி வீஜய் காரை ஓட்டி வருகிறார் என்பதும் இந்த காரின் உள்ளே நெல்சன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.