கிசு கிசு
விஜய் 65-ல் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவுட்.. அப்ப யாரு இன்?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், விஜய் 65 படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியாகியுள்ளார். எனவே அடுத்து விஜய்யை இயக்கப் போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் திரைப்படங்களை இயக்கியவர் முருகதாஸ். இந்தியாவின் மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.
விஜய் நடிப்பில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் முடிவடைந்து, கொரோனா ஊரடங்கு காலமாக நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இப்போது கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்த நிலையில், திரைப்பட படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்டு தடைகள் நீங்கி, பல படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
எனவே மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் விஜய் 65-ஐ இயக்க இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் விலகியுள்ளார். அதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்க்கு சொன்ன கதையில் முதல் பாதி மட்டும் பிடித்து இருந்ததாகவும், இரண்டாம் பாதி கதையில் மாற்றம் வேண்டும் என்று கேட்கப்பட்டதாகவும் அதில் இயக்குநருக்குச் சம்மதம் இல்லாததால் விலகியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனவே விஜய்க்கு ஏற்கனவே கதை சொல்லி இருந்த மகிழ் திருமேனி, விஜய் 65-ஐ இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ் திருமேனி ஆர்யாவை வைத்து மீகாமன், அருண் விஜய்யை வைத்து தடம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே முதலில் விஜய் படமா? உதயநிதி படமா? என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புகள் உண்டு.




















