வணிகம்
ரூ.1க்கு ரூ.4,999 ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்களுக்கு விஐ வழங்கும் அசத்தலான சலுகை!

வோடபோன் ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. Vi கேம்ஸின் “கேலக்ஸி ஷூட்டர்ஸ் ஃப்ரீடம் ஃபெஸ்ட்” சிறப்பு பதிப்பின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1க்கு ரூ.4,999 ரீசார்ஜ் திட்டத்தை வெகுமதியாகப் பெறலாம்.
டெலிகாம்டாக் தகவலின்படி, இந்த சலுகை ஆகஸ்ட் 31, 2025 வரை கிடைக்கும். ஃப்ரீடம் ஃபெஸ்டில் பங்கேற்கும் பயனர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதில் முக்கியமானது, ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் ரூ.4,999 ரீசார்ஜ் பேக்.
இந்த திட்டத்தில்:
அன்லிமிடெட் அழைப்புகள்
தினமும் 2 ஜிபி மொபைல் டேட்டா
தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்
வரம்பற்ற 5ஜி டேட்டா
Vi Movies & TV மற்றும் Amazon Prime இலவச சந்தா
மதியம் 12 மணி முதல் இரவு 12 மணி வரை அன்லிமிடெட் டேட்டா
வார இறுதி டேட்டா ரோல்ஓவர்
எனப் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பேக் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சில திட்டங்களை நிறுத்தி வரும் சூழலில், விஐ-யின் இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஆதரவாகவும், போட்டியாளர்களுக்கு சவாலாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.












