தமிழ்நாடு
‘இதைதான் குடும்பக்கட்சிங்கிறாங்க…’- உதயநிதியிடம் க்யூட்டாக பேசிய சிறுவன்; ஆர்ப்பரித்த தொண்டர்கள்!!!

திமுக தரப்பில் இந்த முறை அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதயநிதி, தன் சொந்த தொகுதியில் மட்டுமல்லாமல், திமுக வேட்பாளர்களை ஆதரித்துத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சேத்தமங்கலம் தொகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதியிடம் பேச ஒரு சிறுவன் விருப்பப்பட்டு உள்ளான். அவனை பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி உரையாடியுள்ளார் உதயநிதி.
இதைதான் குடும்பக்கட்சிங்கிறாங்க….???????????????????????? pic.twitter.com/f9CMikslEh
— வரவணை செந்தில் (@Varavanaisen) March 29, 2021
அந்தச் சிறுவன், தன் பெயரைச் சொல்ல, ‘என் பெயர் உதயநிதி’ என்று சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து அவர், ‘வெறுங்காலுல நிக்குறியே சுடுதா?’ எனக் கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், ‘கட்சிக்காக உயிரையே கொடுக்கலாம்’ என்கிறார்.
இதனால் நெகிழ்ச்சியடையும் உதயநிதி, மக்களைப் பார்த்து, ‘இதைத் தான் குடும்பக் கட்சிங்கிறாங்க’ என புன்முறுவில் இடுகிறார்.
இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






















