Connect with us

ஜோதிடம்

யப்பா டேய்..வாங்குன பணத்தை திருப்பிக் கொடுடா.. என்று கேட்பவரா நீங்கள்..

Published

on

இப்பொழுதெல்லாம் நம்ம கிட்ட  பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்த நாம் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். நாமும் பரிதாபப்பட்டு கொடுத்து விடுவோம்.  ஆனால் அதனை திருப்பித் தரும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்‌. வடிவேலு பட ஜோக் மாதிரி பணத்தை எப்படா திருப்பித் தருவே? என்று கேட்டால் பணம் வரும்போது திருப்பித் தருவேன் என்பார்கள். எப்படா வரும் என்று கேட்டால் உனக்கு கொடுக்கும்போது வரும் என்பார்கள்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப ராமாயணத்தில் கம்பர் கூறியிருப்பார். ஏனென்றால் கடன் வாங்குவது அவ்வளவு கொடுமையாகக் கருதப்பட்ட காலம் அது. ஆனால் இப்போது கம்பன் இருந்தால் கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்றுதான் பாடியிருப்பான். கொடுத்த கடனை வாங்குவது அவ்வளவு பெரும்பாடாக இருக்கிறது. அதிலும் சில பேர் கந்து வட்டி கேட்கிறான் என்று காவல் நிலையத்தில் நம் மீதே புகாரும் கொடுத்து விடுவார்கள். இன்னும் சில பேர் கடன் கொடுத்தவன் பேரை சொல்லி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்கள்.

இப்படி பணத்தை மற்றவர்களிடத்தில் கொடுத்து ஏமாந்து நிற்பவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப பெற என்ன செய்வது என்பதே பெரிய மண்டைக் குடைச்சலாக போகிறது பல நேரங்களில்.

இப்படிப்பட்ட நபர்கள் ஆண்டவன் மேல் பாரத்தை இறக்கி வைத்து செய்ய வேண்டிய எளிய பரிகார முறை என்ன என்பது  பற்றி இப்போது  பார்க்கலாமா…  இந்த பரிகாரத்தை செய்ய  நமக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரம் வேண்டும் சுத்தமான தயிர் கருப்பு உளுந்து அனைத்தும் தேவைப்படும். வெள்ளிக்கிழமை இரவு பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் கருப்பு உளுந்தை போட்டு மூழ்கும் அளவிற்கு தயிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலை  குளித்து முடித்த பிறகு ஊற வைத்துள்ள கருப்பு உளுந்தை அரச மரத்தின் வேர் பகுதியில் கொட்ட வேண்டும். பரிகாரத்தை செய்ய தொடங்கியதிலிருந்து பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்  கொண்டே செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை முதலில் அமாவாசை அன்றுதான் செய்ய வேண்டும். அமாவாசை அன்று தொடங்கி அதன் பிறகு வரக்கூடிய 8 சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை விடாமல் செய்ய வேண்டும். அரச மரத்தில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. சனிக்கிழமை அன்று பெருமா‌ளும் மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சனிக்கிழமையில் இந்த அரச மர பரிகாரம் செய்வது மிகவும் நல்லது என கருதப்படுகிறது. பணம் வாங்கியவர்கள் திரும்பி தரக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் இருந்தாலும் கூட அதை திருப்பி தருவதற்கான சூழ்நிலையை இந்த பரிகாரம் அமைத்து தரும். ஆகையால் பணத்தை கொடுத்து விட்டு திரும்ப பெறுவதற்கு சிரமமாக இருந்தால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து அதற்கான பலனை பெற்றுக் கொள்ளுங்கள் அத்தோடு இனிமேல் இது போல பணத்தை கொடுத்து விட்டு பரிதவிக்காமல் இருக்க ஒன்றுக்கு பலமுறை யோசனை செய்து அதற்கு ஜவாப்தாரியாக அதாவது அடமானமாக வேறு ஏதாவது பொருளோ தங்கமோ நிலப் பத்திரமோ டபெற்றுக் கொண்டு கடன் கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ஊரில் நீங்கள் ஒரு  வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி அதற்கு தலைவராக வேண்டியும் வரலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்23 minutes ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்28 minutes ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்43 minutes ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
sonic racing : crossworlds. The 2025 global life work balance index shows new zealand and spain at the top, mostly thanks to generous leave policies. Mvp нагорода та як обирають найціннішого гравця.