வணிகம்
பெண்களுக்கான சிறப்புத் திட்டம்: ரூ.75 ஆயிரம் முதல் ₹10 லட்சம் வரை வங்கி கடன் – தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

பெண்கள் தொழில் தொடங்க ரூ.75,000 முதல் ₹10 லட்சம் வரை பிணையம் இல்லா கடன் – தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், கிராமப்புற சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக, பிணையம் இல்லாமல் ரூ.75,000 முதல் ₹10 லட்சம் வரை கடன் பெறலாம். இது வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் துறைகளில் பயன்படுகிறது.
இந்த கடன் திட்டம் CGTMSE மற்றும் CGFMU திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், மற்றும் குறைந்தது 2 ஆண்டுகள் குழுவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும், கடந்த கால வங்கிக் கடன்களை நேரத்தில் திருப்பிச் செலுத்தியிருப்பது அவசியமாகும்.
இந்த திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
2% வட்டி மானியம் (₹1.5 லட்சம் வரை கடன்களுக்கு)
கடன் உத்தரவாதக் கட்டணம் திரும்ப பெற முடிவு
பாண், ஆதார், வங்கி பாஸ் புக், விற்பனை உறுதி ஆவணங்கள் தேவை
விண்ணப்பிக்க:
உங்கள் கிராம பஞ்சாயத்து PLF/BLF அல்லது சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளரையும், அல்லது உங்கள் வங்கிக் கிளையையும் தொடர்பு கொள்ளுங்கள்.


















