செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அப்டேட்!

தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) 2023 செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றோடு மூன்றாவது ஆண்டில் பயணிக்கிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.
ஆனால் தகுதியிருந்தும் சிலர் கடந்த முறை திட்டத்தில் சேர முடியவில்லை. அவர்களுக்காக அரசு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுவரை சுமார் 18 லட்சம் பெண்கள் புதியதாக விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய பயனாளிகள் ரூ.1000 எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
புதிய பயனாளிகளுக்கான அப்டேட் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும்.
தகுதியான, கடந்த முறை விடுபட்ட அனைவரும் இம்முறை திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
நவம்பர் மாதத்துக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, டிசம்பர் அல்லது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும், உதயநிதி ஸ்டாலின், “இம்முறை விண்ணப்பிக்காதவர்களுக்கு அடுத்த வாய்ப்பு விரைவில் கிடைக்காது. ஏனெனில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த விரிவாக்கம் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மட்டுமே இருக்கலாம்” என தெரிவித்தார்.
ஆகையால், இன்னும் விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால், ரூ.1000 உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும்.






















