தமிழ்நாடு
இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வரவில்லை: உண்மையை உடைத்த ரஜினிகாந்த்!

அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

#image_title
இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர் ரவிச்சந்திரன் ஒரு மருத்துவர் என்பதை தாண்டி எனக்கு ஒரு சிறந்த நண்பர். 2010 முதல் நான் அவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடநிலையை விளக்கி கூறி அவரது பரிந்துரையின் பேரில் தான் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பெற பெரும் உதவி செய்தார்.
மேலும் கொரோனா இரண்டாம் அலைக்கு முன்னர் நான் அரசியலில் நுழைவதாக இருந்தது. ஆனால் என்னுடைய அரசியல் சூழ்நிலை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரவிச்சந்திரன் என்னிடம் கூறினார், ‘அரசியலில் ஈடுபடுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிட முடியாது. ஆனால் உங்கள் கட்சி தொண்டர்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் 10 அடி தூரத்தில் நின்று தான் பேச வேண்ட்டும். வெளியில் சென்றால் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்’ என பல நிபந்தனைகள் விதித்தார்.
ஆனால் நான் எனது மக்களுக்கு மத்தியில் சென்றுவிட்டால் இதை எதையும் நான் பின்பற்ற முடியாது. பிறகு அது எனது உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதை சொன்னால், ரஜினிகாந்த் அரசியலில் பயந்துவிட்டார் என்று பேசுவார்களே என நினைத்தேன். ஆனால் மருத்துவர் ரவிச்சந்திரன் கொடுத்த உறுதியான ஆலோசனைக்கு பிறகுதான் நான் தைரியமாக ஊடகத்திடம் அரசியலுக்கு வரவில்லை என்பதை தெரிவித்தேன் என பேசினார்.