Connect with us

தமிழ்நாடு

இன்று முதல் திருவொற்றியூர்- விம்கோநகர் மெட்ரோ இயக்கம்: முழு விபரங்கள்

Published

on

இன்று முதல் திருவொற்றியூர்- விம்கோநகர் மெட்ரோ இயக்கப்படவுள்ள நிலையில் இதுகுறித்த முழு விபரங்களை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டம்‌, கட்டம்‌ 1ன்‌ நீட்டிப்பு திட்டத்தின்‌ கீழ்‌ வண்ணாரப்பேடை முதல்‌ விம்கோ நகர்‌ வரை 9 கிமி, பயணிகள்‌ சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில்‌ திருவொற்றியூர்‌ தேரடி மற்றும்‌ விம்கோ நகர்‌ பணிமனை மெட்ரோ இரயில்‌ நிலையங்களின்‌ அனைத்து பணிகளும்‌முடிவுற்றது. மற்றும்‌ மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையர்‌ ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல்‌ அளித்ததின்‌ பேரில்‌, அவ்விரு மெட்ரோ இரயில் நிலையங்கள்‌ மார்ச் 13 (ஞாயிற்றுக்கிழமை) முதல்‌ பயணிகள்‌ பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது

“திருவொற்றியூர்‌- விம்கோ நகர்‌ மற்றும்‌ அதன்‌ சுற்றுப்புற பகுதிகளில்‌ வாழும்‌ பொதுமக்கள்‌ மேற்கண்ட இரயில்‌ நிலையங்களில்‌ மெட்ரோ இரயில்‌ சேவையைப்‌ பெற்று பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌, விம்கோ நகர்‌ பணிமனை மெட்ரோ இரயில்‌ நிலையத்தில்‌ இம்மாதம்‌ மட்டும்‌ பயணிகள்‌ நங்கள்‌ வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்‌.

சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ தொடங்கப்பட்ட நாளில்‌ இருந்த இம்மாதம்‌ மட்டும்‌ 2 லட்சம்‌ பயணிகள்‌ மெட்ரோ இரயிலில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌. சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ பயணிகளுக்கான சேவை தொடங்கியது. மெட்ரோ இரயில்‌ சேவை தொடங்கி 7 ஆண்டு பூர்த்தி அடைந்து பயணிகளுக்கான பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயில்‌ முதல்‌ கட்டம்‌ மற்றும்‌ அதன்‌ விரிவாக்கம்‌ திட்டம்‌ நிறைவேற்றி 54.41 கிமீ தூரத்திற்கு அதன்‌ இயக்கம்‌ தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு மெட்ரோ இரயில்‌ சேவை இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மெட்ரோ இரயில்‌ பயணிகளின்‌ எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்‌ தன்‌ மெட்ரோ பயணிகளின்‌ எண்ணிக்கை இம்மாதம்‌ 11ஆம் தேதி அன்று மட்டும்‌ 2 லட்சம்‌ பயணிகள்‌ சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணத்துள்ளார்கள்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவே இருக்கும்‌. இந்த மைல்‌ கல்லையும்‌ தாண்டி, புதிய சாதனை படைக்க சென்னை மெட்ரோ இரயில்‌ பயணிகளின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரிக்க பயணிகளின்‌ வருகை அதிகரிக்க வேண்டும்‌. இந்த சாதனை தொடர இரயில்‌ பயணிகளின்‌ ஆதரவு என்றென்றும்‌ தொடர வேண்டும்‌.

இவ்வாறு சென்னை மெட்ரோ இரயில்‌ இறுவனம்‌ தெரிவித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?