வேலைவாய்ப்பு
மதுரையில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் திறப்பு – 155 காலியிடங்கள்!

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், இப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் மொத்த 155 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
காலியிடங்கள் பகிர்வு:
மதுரை கிழக்கு: 35 இடங்கள்
கள்ளிக்குடி: 2 இடங்கள்
மேலூர்: 23 இடங்கள்
மதுரை வடக்கு: 15 இடங்கள்
மதுரை தெற்கு: 7 இடங்கள்
திருமங்கலம்: 7 இடங்கள்
உசிலம்பட்டி: 8 இடங்கள்
வாடிப்பட்டி: 13 இடங்கள்
மதுரை மேற்கு: 11 இடங்கள்
தகுதிகள்:
வயது: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 32 வயது.
அரசு விதிகளின்படி பின்வரும் தளர்வுகள்: பழங்குடி/பட்டியலின பிரிவு – 42; பிசி/எம்பிசி – 39; மாற்றுத்திறனாளிகள் – வயது தளர்வு.
கல்வி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
மொழி: தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வாகனம்: மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வசிப்பு: சம்பந்தப்பட்ட கிராம எல்லைக்குள் வசிப்பு.
சம்பளம்: ரூ. 11,100 – 35,100
விண்ணப்பிக்கும் முறை:
மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
சாதிச்சான்று
இருப்பிடச் சான்று
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
புகைப்படம்
இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் நகல்
கடைசி தேதி: 15 நவம்பர் 2025
முக்கிய குறிப்பு: நேர்காணல் மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடத்திற்கு நியமனம் செய்யப்படுவர்.














