சினிமா
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மிதா சென்.. என்ன ஆச்சு?

நடிகை சுஷ்மிதா சென் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதும் பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ரட்சகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுஷ்மிதா சென். ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வ படத்தின் ஷக்கலக்கா பேபி பாடலிலும் நடனம் ஆடியிருப்பார்.

#image_title
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், ஆடிசன் எனும் அரிய வகை நோய் பாதிப்பால் சினிமாவில் நடிப்பதையே சில ஆண்டுகள் விட்டு விட்டு விலகி இருந்தார்.
பல பாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் செய்துள்ள நடிகை சுஷ்மிதா சென் இதுவரை திருமணமே செய்துக் கொள்ளவில்லை. ஆனால், அதற்கு பதிலாக 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

#image_title
சமீபத்தில், ஆர்யா எனும் வெப்சீரிஸ் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள சுஷ்மிதா சென், கடந்த 2019ம் ஆண்டு ரோமன் ஷால் எனும் இளைஞருடன் காதலிக்க ஆரம்பித்தார்.
ஆனால், சில மாதங்கள் கழித்து இருவரும் பிரேக்கப் செய்வதாக அறிவித்து மீண்டும் பாலிவுட் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் சுஷ்மிதா சென்.

#image_title
கடந்த ஆண்டு கடைசியாக லலித் மோடியுடன் டேட்டிங் செய்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகின. மேலும், இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என 47 வயதான நடிகை சுஷ்மிதா சென் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தனக்கு 2 நாட்கள் முன்னதாக மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் மருத்துவர்கள் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டு தற்போது நலமாக உள்ளேன் என அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதை பார்த்த பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் அவரது உடல் நலனை விசாரித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றனர்.