சினிமா
ஓடிடியில் வெளியாகும் ‘லெஜெண்ட்’ திரைப்படம்!

நடிகர் சரவணன் நடித்த ‘லெஜெண்ட்’ படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘லெஜெண்ட்’ படம் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்த நிலையில் படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது.

Legend
பொதுவாக படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் என்ற நிலையில் ‘லெஜெண்ட்’ திரைப்படம் ஆறு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. படம் ஓடிடியில் வெளியாவதற்கு படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட சில கண்டிஷன்கள் பல ஓடிடி தரப்பிலும் உடன்படாததால் படம் ஓடிடியில் வெளியாக தாமதமாகி இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்தான உறுதிப்படுத்தப்பட்டத் தகவல்கள் வெளியாகவில்லை.
இப்போது, படம் நாளை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.