சினிமா செய்திகள்
‘ஜெய்பீம்’ அப்டேட் தந்த 2டி எண்டர்டெயின்மெண்ட்: வைரல் வீடியோ!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சற்றுமுன்னர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் அப்டேட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’ .இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தீம் மியூசிக் மற்றும் அதன் பின்னணி காட்சிகள் குறித்த வீடியோ ஒன்று 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இசையமைப்பாளர் சீன் ரோல்டன் கம்போஸ் செய்த அட்டகாசமான தீம் மியூசிக் மற்றும் சூர்யாவின் ஆவேசமான நடிப்பு உள்பட பல காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும் அவர் அந்த மக்களுக்காக வாதாடி அவர்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத் தருவது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
In the end, does justice prevail?
Watch #JaiBhimOnPrime, Nov 2. @PrimeVideoIN @Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol pic.twitter.com/8Gc3scB4Xo
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 11, 2021





















