சினிமா செய்திகள்
ஒரே வாரத்தில் ரூ.4500 கோடி வசூல்: ‘ஸ்பைடர்மேன்’ செய்த சாதனை

சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் ஒரே வாரத்தில் 4,500 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ததாக வெளியான தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்பைடர்மேன்’ டிசம்பர் 14ஆம் தேதி சில நாடுகளிலும், இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது என்பதும், முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் அமெரிக்காவில் மட்டும் ஒரே வாரத்தில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் 2500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் மொத்தத்தில் இந்த படம் ஒரே வாரத்தில் 4500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அல்லது நாளைக்குள் 5000 கோடி இந்த படம் வசூல் செய்து விடும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 200 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி என்ற நிலையில் தற்போது ஒரே வாரத்தில் ரூ.4500 கோடி வசூல் செய்துவிட்டது. அதாவது மூன்று மடங்கு வசூல் செய்துவிட்டது என்பதும், இன்னும் பல மடங்கு வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.


















