Connect with us

சினிமா செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்!

Published

on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று 1 மணிக்கு உயிரிழந்தார். இந்திய திரையுலகில் அவருக்கு வயது 74.

பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார். சற்றுமுன்னதாக அவரது உயிர் பிரிந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர். அவர் ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாக தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காகத் தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்கு படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காரணமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். இதையடுத்துச் சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். சென்ற வாரம் அவரின் உடல்நிலை சீராகி வந்தது. தொடர்ந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்குக் கடந்த நில நாட்களுக்கு முன்பு சுய நினைவும் வந்தது.

இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இதனிடையே எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. எஸ்பிபி உயிரிழந்ததை அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடைய செப்டம்பர் 4ம் தேதி முதலே எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் காலமானார் ஒன்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்6 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

Translate »
life coaching wien : entdecken sie ihre persönliche und berufliche entwicklung. ​ let’s look at the sonic movie 3 and see if it lives up to the hype. Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče.