தமிழ்நாடு
தோல்வி மேல் தோல்வி.. தனித்துவிடப்பட்ட ஓ பன்னீர்செல்வம்.. இன்னும் 6 மாசத்தில் கேம் ஓவராமே!

சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார். பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.

#image_title
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் ஈரோட்டில் எடப்பாடி டீமில் சேர்ந்து உள்ளனர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணியில் சேர்ந்துவிட்டனர். இதெல்லாம் போக பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்துவிட்டார்.
இப்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு தொட்டதெல்லாம் தோல்வி என்று நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அவருடன் இருக்கும் நிர்வாகிகள் பலர் ஓ பன்னீர்செல்வத்தை விட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு சப்போர்ட் இல்லை. அவருக்கு ஆதரவாக எதுவும் நடப்பது இல்லை. அவருடன் இருந்தால் நமக்கு எதிர்காலம் போச்சு.
எடப்பாடி தன்னுடன் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார். அவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார். ஒன்று எடப்பாடியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் திமுக பக்கம் செல்ல வேண்டும். ஓ பன்னீர்செல்வத்துடன் இருப்பது இனியும் தங்களுக்குப் பலன் கொடுக்காது என்று நிர்வாகிகள் நினைக்க தொடங்கிவிட்டனராம்.
இதனால் வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகும் என்கிறார்கள். அடுத்த 6 மாதங்களுக்குள் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவர்களாக அவரின் கூடத்திலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் டாப் தலைகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.