தமிழ்நாடு
யப்பா சாமி தலை சுற்ற வைக்கும் பரிசு மழை: ஈரோடு வாக்காளர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு மழை பெய்கிறது என்று சொல்லலாம், அந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் தாராளமாக வழங்கி வருகிறது.

#image_title
திமுக ஆட்சிக்கு சான்றாக இந்த தேர்தல் வெற்றி அமைய வேண்டுமென்று திமுகவினரும், எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுகவினரும் இந்த தேர்தலை மிக முக்கியமான தேர்தலாக கருதி தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் என விதவிதமாக கவனித்து வருகின்றனர்.
ஆளும் தரப்பில் இருந்து ஒரு வாக்குக்கு 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும், குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், ஹாட் பாக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், வேட்டி, சேலை போன்ற பல பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல எதிர் தரப்பும் ஒரு வாக்குக்கு 2000 ரூபாய் முதல் வழங்கி வருவதாகவும், வெள்ளி அகல்விளக்கு, வெள்ளித் தட்டு வெள்ளி டம்ளர், பேண்ட், சட்டை, பட்டுசேலை போன்ற பல பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

#image_title
இத்தோடு நின்றுவிடவில்லை இந்த கவனிப்புகள். அதிக வாக்குகள் உள்ள வீடுகளுக்கு அரசியல் கட்சிகள் சிறப்பு டோக்கன்களும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் தங்க நாணையங்கள், தங்க மூக்குத்தி போன்ற விலை உயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஈரோடு கிழக்கு தொகுதியும் அரசியல் கட்சிகளின் பரிசு மழையால் நிரம்பி வழிகிறது. தமிழகம் இதுவரை கண்டிராத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் உள்ளது.