தமிழ்நாடு
ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க தீர்மானம்: சட்டசபையில் அதிமுக அமளி, வெளிநடப்பு!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதால் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி நீண்ட நாட்களாக முயன்று வருகிறார். அதன்படி இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

#image_title
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார். இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் தனி தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருந்தது. ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அதனை முதலில் நிறைவேற்றும்படி சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானத்தை இன்று நிறைவேற்றிவிட்டு நாளை தனித்தீர்மானம் குறித்து விவாதிப்போம் என்று சபாநாயகர் கூறினார். இதனையடுத்து சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.