சினிமா
மெர்சலை தொடர்ந்து ஆந்திராவுக்கு செல்லும் சர்கார்!
Published
4 years agoon
By
seithichurul
மெர்சல் படத்தை தெலுங்கில் அதிரிந்தி என்ற தலைப்பில் வெளியிட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் செய்தது. தற்போது சர்கார் படமும் தெலுங்கில் ரிலீசாகிறது.
தெலுங்கு படங்களான ஒக்கடுவை கில்லியாக மாற்றி ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார் விஜய். தொடர்ந்து போக்கிரி, ஆதி உள்ளிட்ட பல தெலுங்கு படங்களை ரீமேக் செய்தார். ஆனால், தற்போது, மெர்சல் படத்தை நேரடியாக தெலுங்கில் அதிரிந்தி என பெயர் மாற்றம் செய்து வெளியிட்டே சாதனை படைத்தார்.
இந்நிலையில், வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள சர்கார் படத்தையும் தெலுங்கில் அதே டைட்டிலுடன் வெளியிட்டு கல்லா கட்டவுள்ளனராம். தெலுங்கு தேசத்தில் அசோக் வல்லபாணி தெலுங்கு ரிலீஸ்உரிமையை பெற்றுள்ளாராம்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படம் எடுத்து டோலிவுட்டுக்கு பரீட்சையமானவர் என்பதால், ஆந்திராவிலும் சர்காருக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You may like
அம்பேத்கார் பெயர் வைத்ததால் ஆத்திரம்: அமைச்சரின் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்!
ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்கள்: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!
ஆந்திராவின் 13 மாவட்டக்களும் பிரிப்பு: திருப்பதி தலைநகராக கொண்டு புதிய மாவட்டம்!
திருப்பதியில் திடீர் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்!
ரஜினி தரப்பு டார்ச்சர் எதிரொலி: ஆந்திரா பக்கம் செட்டிலாகும் தனுஷ்?
கர்நாடகா, மத்திய பிரதேசத்தை அடுத்து ஆந்திராவிலும் ஹிஜாப்புக்கு தடையா?