Connect with us

தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியா..? அடுத்தகட்ட அரசியல் மூவ் என்ன? – மனம் திறக்கும் சகாயம்

Published

on

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தற்போது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடக் கூடும் என்று சிலர் ஆருடம் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, சகாயம், நாம் தமிழர் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தன் ‘மக்கள் பாதை’ இயக்கத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார் சகாயம். தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் உரையாற்றி வருகிறார். சகாயம், சமீபத்தில் தான் பார்த்து வந்த ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்பு ஓய்வு கேட்டிருந்தார். அவருக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கொடுத்தது தமிழக அரசு.

இந்நிலையில் தன் அரசியல் வருகை குறித்து சகாயத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த போது, என்னிடம் தொடர்ந்து அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டு வந்தது. நான் அரசு அதிகாரி. என் கடமையைச் செய்ய நான் அரசிடம் இருந்து நான் ஊதியம் பெற்று வந்தேன். இப்படி இருக்கையில் என்னிடம் ஏன் அரசியல் குறித்து கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்டு வந்தேன். அதையே தான் நான் இப்போதும் கேட்கிறேன். மக்கள் பாதை இயக்கம் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான பணிகளை மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த சமூக மாற்றமானது விரைவில் நிர்வாக மாற்றத்தையும் கொண்டு வரலாம்’ என்றவர்,

ஊழலுக்கு எதிரான தன் பயணம் குறித்து, ‘நான் அரசு அதிகாரியாக இருந்த போது, தனி ஒரு ஆளாக இருந்து ஊழலை எதிர்த்தேன். அதற்காக பல்வேறு முறை பணி மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டேன். நான் ஊழலை எதிர்ப்பது என்பதை, வெறுமனே லஞ்சம் வாங்காமல் செயல்படுவதாக பார்க்கவில்லை. ஊழல் என்பது தான், நம் நாட்டின் மொத்த வளர்ச்சியையும் தடுக்கின்றது என்று நம்புகிறேன். அதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையும் என்றும் நினைக்கிறேன். அதற்கான சமூக மாற்றப் பணிகளைத்தான் மக்கள் பாதை இயக்கம் மூலம் செய்து வருகின்றேன்’ என்று கூறினார்.

தமிழ்ச் சமூகம் குறித்து சகாயம் பேசுகையில், ‘தமிழ்ச் சமூகத்தில் நேர்மை என்பது குறைந்துள்ளதை நான் காண்கிறேன். ஒரு சமூகமாக நாம் விழித்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்ச் சமூகம் தன் அடிமைத்தனங்களை உடைத்தெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஊழலை எதிர்த்து, நேர்மையான சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற வேண்டும். அப்படி மாறினால், நேர்மையான தலைவர்களை இந்தச் சமூகம் தானாக தேர்ந்தெடுக்கும். அந்த மாற்றத்துக்காகத் தான் நான் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்று முடித்தார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Page und turner verlag. Loading live gold market intelligence. – micro ondes  : des options pratiques pour cuisiner et réchauffer, parfaites pour les personnes actives.