தமிழ்நாடு
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை அறிவிப்பு!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரை நோக்கி செல்லும் என்றும் இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மற்றும் நவம்பர் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், பெய்யக்கூடும் என்பதால் இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




















