சினிமா
பிட்டு பட நடிகராக மாறிய பாகுபலி வில்லன்; நாக்கைப் பிடுங்கற மாதிரி திட்டும் ரசிகர்கள்!

நெட்பிளிக்ஸில் இன்று வெளியான ராணா நாயுடு வெப்சீரிஸில் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ள நிலையில், அந்த வெப்சீரிஸை பார்த்த ரசிகர்கள் இரு நடிகர்களையும் நாக்கைப் பிடுங்குற மாதிரி திட்டித் தீர்த்து வருகின்றனர்.
அடல்ட் வெப்சீரிஸ் என அறிவிக்கப்பட்டு வெளியானாலும், ஆபாசக் காட்சிகளிலும் எல்லை மீறிய பாலியல் காட்சிகளிலும் ராணா டகுபதி நடித்ததை பார்த்த நெட்டிசன்கள் மோசமான வெப்சீரிஸ் என்றும் ஆபாசக் காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகளை தவிர கதையில் ஒன்றுமே இல்லை என விளாசி வருகின்றனர்.

#image_title
ஆங்கிலத்தில் உள்ள ரே டோனோவான் எனும் பிரபல வெப்சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்றாலும் இந்த வெப்சீரிஸை இயக்கிய சுபர்ன் வர்மா மற்றும் கரண் அன்ஷுமான் சேர்ந்து செம சொதப்பல் சொதப்பி வைத்துள்ளதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி இருவரும் இணைந்து ஆபாச வசனங்கள் பேசுவது மற்றும் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் என வெப்சீரிஸ் முழுவதுமே உள்ளதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.

#image_title
தெலுங்கு ரசிகர்கள் பலரும் இதுவரை வெங்கி மாமா குடும்பப் பாங்கான கதைகளில் தான் நடித்து வந்தார் என்றும் ஒட்டுமொத்தமாக தனது பெயரை ஏன் இப்படி கெடுத்துக் கொண்டார் என்றும் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டு வருகின்றனர்.