சினிமா
ரஜினி மன்ற உறுப்பினர் மீது ரஜினி அவேசம்.!

பிரபல திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியை வெளியிட்டார். ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அதனை நிறுவி வந்தார்.
சமீபத்தில் அவரது மன்றத்தின் நிர்வாகிகளை நியமிப்பதில் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து இன்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ” மன்றத்தின் கொள்கைக்கு மாறாக பணம் பதவி மேல் ஆசைப்படுபவர் யாரும் மன்றத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மன்றத்திற்காக பணம் செலவு செய்யும்படி யாரையும் நான் கேட்கவில்லை. மேலும் இதில் அதற்கான தேவையும் இல்லை. மற்றவர்களை போல அரசியல் நடத்த நாம் அரசியலுக்கு வரவில்லை. மன்றத்திற்காக உண்மையாக உழைப்பவர்களை எனக்கு தெரியும். அவர்கள் உழைப்பு வீண்போகாது. 30, 40 வருடங்கள் மன்ற உறுப்பினராக இருந்தது மட்டுமே மன்றத்தை நிர்வகிக்க தகுதியாகி விடாது” என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன் அவரது மன்றத்தில் நியமிக்க பட்ட ஒருவர் அடுத்த நாளே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பதவி நீக்கப்பட்ட அவர் தான் 30 ஆண்டுகளாக மன்றத்தில் இருப்பதாகவும், மன்றத்திற்காக நிறைய செலவு செய்திருப்பதாகவும் கூறி தனக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை என்று வினாவினார். இவரின் இந்த நடவடிக்கையே ரஜினியின் இந்த கோவமான அறிக்கைக்கு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.
மன்றத்தை கறாராக நிர்வகித்து வரும் ரஜினியாவது தமிழக மக்களின் தலையெழுத்தை திருத்தி எழுதுவாரா என்று பார்க்கலாம்.
















