தமிழ்நாடு
இந்த பூச்சாண்டி எல்லாம் பலிக்காது… அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பாருங்கள்: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் சவால்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் ஊழல் மற்றும் சொத்துப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தமிழகத்தில் ஆட்சி செய்த மற்ற கட்சியினரின் ஊழல் பட்டியலும் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது கூட்டணி கட்சியான அதிமுகவையும் சீண்டும் விதமாக அமைந்ததால் அதிமுகவினர் இதற்கு எதிர்வினையாற்ற ஆரம்பித்துள்ளனர். அதிமுகவின் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார்.

#image_title
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், 2006 முதல் 2011 வரையில் ஆட்சியில் இருந்த கட்சியை சொல்லியிருப்பார். மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றை பற்றியோ பயம் இல்லை. அண்ணாமலை அதிமுக என்று சொல்லட்டும். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்றார்.
மேலும், அண்ணாமலைக்கு இப்பொழுதும் சவால் விடுகிறேன். நாளைக்கே அதிமுக ஆட்சியில் உள்ள சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என சொல்லட்டும். அதன் பின் நான் சொல்கிறேன். அதிமுக என்று அவர் சொல்லட்டும். எங்கள் பதில் எப்படி வருகிறது என்று பாருங்கள். அதிமுகவினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பித்து மிரட்டல் விடுவது எல்லாம் எங்களிடம் பலிக்காது. சொத்துப் பட்டியலை வெளியிடட்டும். அதிமுக என சொல்லி சொத்துப் பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம் என்றார்.