உலகம்
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. அடுத்து வரவிருக்கும் ஆப்பு!

இங்கிலாந்தில் முன்பை விட அபாயகரமான கொரோனா வைரஸ் பரவல் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
நடப்பு ஆண்டை கொரோனா ஆண்டு என்று பெயர் மாற்றம் செய்யும் அளவுக்கு உலகையே உலுக்கி விட்டது. இதுவரையில் சுமார் 7 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 16.2 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் புதிய வைரஸ் எடுத்துள்ளதாகவும், முன்பை விட இது அபாயகரமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. உலக சுகாதார நிறுவனமும் இந்தத் தகவலை ஒப்புக்கொண்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப கொரோனா வைரஸ் தன்னை பரிணாம வளர்ச்சி அடையச் செய்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸையும் அது குணப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது





















