சினிமா
முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நயன்தாரா? பொன்னியின் செல்வனில் முக்கிய வேடம்!

லேடி சூப்பர் ஸ்டார் என திரையுலகில் புகழப்படும் நடிகை நயன்தாரா இயக்குநர் மணிரத்னம் படத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குநர் மணிரத்னம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். பெரும் பொருட் செலவில் உருவாக உள்ள இந்த படத்தில் பல்வேறு முக்கிய கதாப்பாத்திருங்கள் உள்ளன. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களை படக்குழுவுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
ஏற்கனவே விக்ரம், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராய், சத்யராஜ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை. விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதை உறுதிபடுத்தியுள்ளனர். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நயன்தாரா இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததில்லை.

















