சினிமா செய்திகள்
நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா குறித்து பாராட்டியுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர்கள் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘தசரா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனை ஒட்டி படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்திற்காக அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகை கீர்த்தி சுரேஷ் நயன்தாராவை பாராட்டி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அவர் பகிர்ந்திருப்பதாவது, “தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையில் நிறைய படங்கள் உருவாகி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் நயன்தாராவையும் சொல்லலாம். தமிழ் சினிமாவில் அத்தையை மாற்றத்தை முன்னெடுத்தவர் அவர். ‘மாயா’ போன்ற படத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடித்து வந்தார்.
அது மிகப்பெரிய மார்க்கெட்டை கதாநாயகிகளுக்கு உருவாக்கி தந்தது. நயன்தாராவால் தான் நிறைய பேர் இது போன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று கீர்த்தி சுரேஷ் பாராட்டி இருக்கிறார்.