தமிழ்நாடு
பாஜகவின் அஸ்திவாரத்தை பிடித்து ஆட்டும் நிர்மல் குமார்.. அப்படியே தாவிய படை.. போச்சே!

சென்னை: பாஜகவில் இருந்து மேலும் பல நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக அதிமுகவிற்கு சென்றுள்ளனர். நேற்று பல நிர்வாகிகள் சென்ற நிலையில் இன்றும் பல நிர்வாகிகள் கட்சி மாறி உள்ளனர்.
பாஜக நிர்மல் குமார் முன்னெடுப்பில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

Nirmal Kumar
லதா – பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு
வைதேகி – பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் இன்று பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து உள்ளார்.
நேற்று OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இப்படி பாஜகவில் இருந்து நிர்வாகிகள் கொத்து கொத்தாக அதிமுகவிற்கு செல்ல தொடங்கி உள்ளது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை நேற்று விமர்சனம் செய்த அண்ணாமலை, அதிமுக, திமுக போன்ற கட்சிகள் பாஜகவில் இருந்துதான் ஆள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.. பாஜக வளர்ந்து உள்ளதை இது காட்டுவதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.